சூப்பர் ஸ்டார் வீட்டுக்கு திடீர் விசிட் - நடிகர் சங்கம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

 
tt

தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள் நடிகர் ரஜினிகாந்தை இன்று நேரில் சந்தித்து பேசினர்.

rajini

தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொருளாளர் திரு.கார்த்தி, துணைத் தலைவர்கள் திரு.பூச்சி எஸ்.முருகன், திரு.கருணாஸ் ஆகியோர் இன்று (01.07.2024) போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தனர். 

tt

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் சங்கத்தின் மூத்த உறுப்பினர்களான .ரஜினிகாந்த் , மற்றும் கமல்ஹாசன் அவர்களிடமும் ஆலோசனை பெறுவது வழக்கம். அந்த வகையில் அடுத்து நடத்த திட்டமிடப்பட்டுள்ள நட்சத்திர கலை விழா குறித்து இன்று ஆலோசனை நடத்தினார்கள். 

வேகமாக நடைபெற்று வரும் நடிகர் சங்க கட்டிடப் பணிகள் குறித்து ஆர்வமாக கேட்டறிந்த ரஜினிகாந்த்,   விரைவில் நேரில் வந்து கட்டிடப் பணிகளைப் பார்வையிடுவதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளாராம்.