ரூ.5000 மானியம் பெறும் சூப்பர் திட்டம்! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் தெரியுமா ?

 
1 1

மீன் மற்றும் இறால் உணவுப் பொருட்களான தேவை அதிகமாகவே உள்ளது.. குறிப்பாக, வார இறுதிகளில் மீன் சந்தைகளில் பெருமளவு மக்கள் கூடும் நிலை உள்ளதால், இதனை பயன்படுத்தி, தொழில்முனைவோராக உயர விரும்புவோர், மீன் மற்றும் இறால் பண்ணைகளை அமைத்து நல்ல வருமானம் பெறலாம்... இதைத்தான் அரசும் ஊக்குவிக்கிறது.. இதற்காகவே, தமிழ்நாடு மீன்வளத்துறை இந்தத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.இறால் வளர்ப்பு முறையை எடுத்துக் கொண்டால், பயோபிளாக் (உயிர்க்கூழ்மம்) தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. மிகவும் குறைவான தண்ணீரை பயன்படுத்தி அதிக அளவில் இறாலை வளர்க்க உதவுகிறது. ராமநாதபுரம், நாகப்பட்டினம், திருவள்ளூர், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இந்தத் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. பொதுப் பிரிவினருக்கு ரூ. 7.20 லட்சம் மற்றும் ஆதிதிராவிடர், பழங்குடியினர், பெண்கள் போன்ற பிரிவினருக்கு ரூ. 10.80 லட்சம் மானியம் இறால் பண்ணை அமைக்க வழங்கப்படுகிறது.. 


இதுபோலவே மீன் பண்ணைகளுக்கும் மானியம் வழங்கப்படுகிறது..இந்த வருடம் மீன் பண்ணை அமைப்போருக்கு, 50 லட்சம் ரூபாயில், ஒரு கோடி மீன் குஞ்சுகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.. சென்னை தவிர, தமிழகம் முழுதும் உள்ள 37 மாவட்டங்களில் செயல்பட்டு வரும், மாவட்ட மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில் உறுப்பினராக உள்ளவர்கள், தங்கள் மீன் பண்ணைகளை பதிவு செய்து, அரசு திட்டங்களை பெற்று வருகின்றனர். மீன் வளர்ப்போர், மீன் குஞ்சுகளை கொள்முதல் செய்ய, அரசு சார்பில் மானியம் வழங்கப்படுகிறது.

அதிகபட்சமாக 10,000 மீன் குஞ்சுகள் கொள்முதல் செய்ய, 5,000 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. 1 ஏக்கரில் மீன் வளர்க்க விரும்புவோருக்கு, 3,000 மீன் குஞ்சுகள் வழங்கப்படும்... மீன் குஞ்சுகளின் எண்ணிக்கை மற்றும் ரகத்தை பொறுத்து, அதன் விலை மாறுபடும். எட்டு மாதங்கள் வளர்த்த பின், அவற்றை நல்ல விலைக்கு விற்கலாம்.


இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் முதல் கட்டமாக 15 ஹெக்டர் பரப்பளவில் இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளனர். தற்போது, வடகிழக்கு பருவமழை தொடங்கிய அனைத்து நீர்நிலைகளிலும் தண்ணீர் அதிகரித்து காணப்படுகிறது.


நிரம்பி காணப்படும் நீர்நிலைகளில் மீன் வளர்க்க ஆர்வம் உள்ளவர்கள் இவ்வாய்பை பயன்படுத்தி கொள்ளலாம். ஒரு ஹெக்டருக்கு 10,000 மீன் குஞ்சுகள் கொள்முதல் செய்ய ரூ.5000 மானியாமாக வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இவ்வாப்பினை பயன்படுத்தி கொண்டு ராமநாதபுரம் மாவட்ட மீன்வளர்ப்பு தொழில் செய்து வரும் மீனவ விவசாயிகள் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். மேலும், கூடுதல் தகவல்கள் பெற 04567 - 230355 தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும் என மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது