அரசியலில் திடீர் திருப்பம்..! தவெக ஆட்சி 5 ஆண்டுகள் தொடர விசிக துணை நிற்கும் - திருமாவளவன்..!

 
1

விசிக தலைவர் திருமாவளவன் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசியதாவது,

எங்களை பொறுத்தவரை தவெக ஆட்சி கவிழ வாய்ப்பு இல்லை. 5 ஆண்டுகளுக்கு எவ்வித இடையூறு இல்லாமலும் தவெக ஆட்சி தொடரும். தவெக ஆட்சி தொடர விசிக துணை நிற்கும். தவெகவுக்கு அளித்த வாக்குறுதியை கட்டாயம் காப்பாற்றுவோம். தவெக ஆட்சிக்கு கொடுத்த ஆதரவு எப்போதும் தவறாது.

நாளை தவெக நடத்தும் கூட்டணி கட்சி கூட்டத்தில் பங்கேற்போம். கட்சி தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பங்கேற்பார்கள். விசிக எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் தவெக கூட்டத்தில் பங்கேற்கிறார்கள்.

அதிமுகவில் தொடர் பதவி விலகல், அக்கட்சியில் நிகழும் உட்கட்சி முரணை வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளது. இது அதிமுகவில் தற்போது பெரிய பிரச்சினையாக உள்ளது. அதிமுகவில் என்ன பிரச்சினை என்பதை பதவி விலகுவோரிடம்தான் கேட்க வேண்டும். அவர்கள்தான் நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.” 

மேலும் அமைச்சர் சரத்குமார் மீதான போதைப்பொருள் பயன்பாடு குற்றச்சாட்டு குறித்த கேள்விக்குஇதில் கட்டாயமாக நிரூபிக்கப்பட வேண்டியது தான். ஆதாரமில்லாமல் ஒரு கருத்தை சொல்லி விட முடியாது.ஆனால் ஒன்று அனைவரும் அறிந்த உண்மை தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுவதிலும் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்திருக்கிறது. கஞ்சா, மாநிலங்கள் விட்டு மாநிலங்கள் செல்கிறது குக்கிராமங்களில் கிடைக்கிறது எந்த கட்சி என்று விவாதிப்பதை விட இந்தியா முழுவதிலும் இது பரவுகிறது இதற்கு யார் பிண்ணனி என கண்டறிந்து கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்பதுதான் முக்கியமான சவாலாக உள்ளது.மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் துறை மாற்றம் குறித்த கேள்விக்கு அது பற்றி தெரியவில்லை". என்றார்.

இவ்வாறு அவர் கூறினார்.