அரசியலில் திடீர் திருப்பம்..!! ம.நீ.ம.விலிருந்து விலகி 'வீ தி லீடர்ஸ்' அமைப்பில் இணைந்த தென் சென்னை நிர்வாகிகள்!

 
Q

நடிகர் கமல் தொடங்கிய ம.நீ.ம., கட்சி, கடந்த 2024 லோக்சபா தேர்தல் மற்றும் 2026 சட்ட சபை தேர்தல் ஆகியவற்றில் போட்டியிடவில்லை.

அதே நேரத்தில், தி.மு.க., ஆதரவுடன், ராஜ்யசபா எம்.பி., பதவியை கமல் பெற்றார். இதனால் ஏற்பட்ட அதிருப்தியில், அக்கட்சியிலிருந்து பலர் வெளியேறி வருகின்றனர்.

இந்நிலையில், ம.நீ.ம., தென் சென்னை மேற்கு மாவட்டச் செயலர் பாலமுருகன், பகுதிச் செயலர்கள் சுரேஷ், முகிலன் உள்ளிட்டோர், அண்ணா மலை தொடங்கிய, 'வீ தி லீடர்ஸ்' அமைப்பின் முக்கிய நிர்வாகி கரு நாகராஜனை நேற்று சந்தித்து, அந்த அமைப்பில் இணைந்தனர்.