நீட் பயிற்சி பெற்று வந்த மாணவி தற்கொலை

 
tn

சின்னசேலத்தில் நீட் பயிற்சி பெற்று வந்த மாணவி தற்கொலை  செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

neet
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் நீட் பயிற்சி பெற்று வந்த மாணவி பைரவி தற்கொலை செய்து கொண்டார்.  நேற்று முன்தினம் விஷம் அருந்திய நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டா. இந்த சூழலில் சிகிச்சை பலனின்றி பைரவி இன்று உயிரிழந்தார்.

neet-4

கடந்த ஆண்டு நீட் தேர்வில் பங்கேற்ற இவர் 250 மதிப்பெண் பெற்றுள்ளார்.  அதிக மதிப்பெண் பெறாத காரணத்தினால் மனம் உடைந்து காணப்பட்ட இவர் கடந்த வாரம் பூச்சி மருந்து குடித்ததாக தெரிகிறது . விஷ மருந்தியதை பெற்றோரிடம் கூறாமல் மறைத்து வந்த நிலையில் வயிற்று வலியின் காரணமாக இவர் அவதிப்பட்டு வந்துள்ளார்.  சாதாரண வயிற்று வலி என்று நினைத்து பெற்றோர் அவரை அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அதன் பிறகு தான் அவர் பூச்சி மருந்து குடித்தது தெரியவந்தது.  தற்போது மாணவி பைரவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியாகி உள்ளார். நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவியின் இறப்பு குறித்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் அப்பகுதியில் இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது