கர்ப்பம் வெளியே தெரிந்துவிடுமோ? பயத்தில் மாணவி விஷம் குடித்து தற்கொலை

 
rape

திருவண்ணாமலை அடுத்த கரியான்செட்டி தெருவைச் சேர்ந்த மலைவாழ் இனத்தை சேர்ந்த மாணவி, சென்னையில் உள்ள  அரசு காப்பகத்தில் தங்கி படித்து வருகிறார். வயிற்றுவலி காரணமாக சென்னை காப்பகத்தினர் சிகிச்சைக்காக திருவண்ணாமலையில் உள்ள அவரது வீட்டிற்கு அனுப்பி உள்ளனர். தொடர் வயிற்று வலி காரணமாக பெற்றோர், மாணவியை ஸ்கேன் செய்து பார்க்கவேண்டும் என அழைத்துள்ளனர்.

81,816 BEST Rape IMAGES, STOCK PHOTOS & VECTORS | Adobe Stock

இந்நிலையில் மாணவி கொக்கிற்கு வைக்கும் பூச்சி மருந்தினை உட்கொண்டு மயங்கி விழுந்துள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மாணவியை மீட்ட பெற்றோர், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அப்போது மாணவியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், மாணவி 6 மாத கால கர்ப்பமாக உள்ளதை கண்டு பிடித்துள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்து மீண்ட மாணவிக்கு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அரசு மருத்துவர்கள் அளித்த புகாரின் பேரில் மகளிர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மாணவி கண் விழித்தால் மட்டுமே மாணவியின் கர்ப்பத்திற்கு யார் காரணம் என தெரிய வரும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.