பள்ளத்தில் தேங்கிய மழைநீரில் மாணவன் தவறி விழுந்து உயிரிழப்பு

 
ச் ச்

அரக்கோணம் அடுத்த  பனப்பாக்கம் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கட்டுமான பணிக்காக தோண்டப்பட்டுள்ள பள்ளத்தில் விழுந்து அரசு பள்ளி 3ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ச்

அரக்கோணம் அடுத்த நெமிலி அடுத்த கல்பலாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் உமாபதி மகன் சந்தோஷ் (8 ). இவன் அங்குள்ள அரசு பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்தான் . இவன் தனது பள்ளி தோழன் கதிரவனுடன் இயற்கை உபாதை கழிக்க சென்றுள்ளான். அப்போது டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கட்டுமான பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. அந்த பள்ளத்தில் சமீபத்தில் பெய்த மழையில் தண்ணீர் தேங்கி உள்ளது. இயற்கை உபாதை கழித்துவிட்டு அங்கு செல்லும்போது பள்ளத்தில் வழுக்கி விழுந்து சந்தோஷ் உயிரிழந்துள்ளான். 

இது குறித்து நெமிலி காவல்துறைக்கு  தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சந்தோஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.