மத்திய மேற்கு வங்கக்கடலில் நாளை உருவாகிறது 'மிதிலி' புயல்

 
 பிபர்ஜாய் புயல் எதிரொலி: 22 பேர் காயம்; 940 கிராமங்கள் இருளில் மூழ்கின..

மத்திய மேற்கு வங்கக்கடலில் நாளை புயல் உருவாகவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

நேற்று முன்தினம் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று ) காலை 0830 மணி அளவில் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று விசாகப்பட்டினத்திலிருந்து சுமார் 510 கிலோ மீட்டர் தென்கிழக்கே நிலை கொண்டது. இந்த நிலையில், வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, மணிக்கு 18 கி.மீ. வேகத்தில் நகர்ந்து செல்கிறது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுவாகி நவ.18ல் வங்கதேசத்தின் மோங்லா - கேபுபரா இடையே கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. 

இந்த நிலையில், மத்திய மேற்கு வங்கக்கடலில் நாளை புயல் உருவாகவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலத்தீவின் பரிந்துரையின் படி புயலுக்கு 'மிதிலி' என பெயர் சூட்டப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது.