தேவாவின் மறக்க முடியாத எவர்கிரீன் மெலடிகள் மற்றும் ஹிட் பாடல்களின் சிறப்புத் தொகுப்பு!
தேனிசைத் தென்றல் என ரசிகர்களால் அழைக்கப்படும் இசையமைப்பாளர் தேவா தனக்கென்று தனித்த இடம் பிடித்த இசையமைப்பாளர்களில் தேவாவும் ஒருவர்.
1989-ஆம் ஆண்டு வெளிவந்த மனசுக்கேத்த மகாராசா என்கிற படத்தின் மூலம் அறிமுகமான தேவா பல்வேறு மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
90களில் இளையராஜா ஒருபுறம், ஏ.ஆர் ரஹ்மான் மறுபுறம் ஆதிக்கம் செலுத்தி வந்த காலகட்டத்தில் தேவாவின் பாடல்களுக்கு தனித்த ரசிகர் பட்டாளம் இருந்தது. 2022-ஆம் ஆண்டு 'தேவா தேவாதான்' இசை நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் இதை சிலாகித்துப் பேசியிருப்பார்.
கானா பாடல்களை திரையுலகில் மையநீரோட்டப்படுத்தியதில் தேவா முக்கியமானவராக அறியப்படுகிறார். தன்னை கானா பாடல்களோடு முத்திரை குத்துவது பற்றி தேவா பல இடங்களில் பேசியிருந்தாலும் அது தனக்கு மகிழ்ச்சி தருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
"90களில் தொடக்கத்தில் நாட்டுப்புற பாடல்களை மீண்டும் பிரபலமாக்கியதில் தேவாவிற்கு முக்கியப் பங்கு உண்டு.தற்போதும் ஊர்ப்புறங்களில் நடைபெறும் இசைக் கச்சேரிகளில் தேவாவின் பாடல்கள் கட்டாயம் இடம்பெறும்
"நடிகர்கள் ரஜினி, கமலுக்கு மட்டுமல்லாது விஜய் மற்றும் அஜித்தின் தொடக்க காலத்தில் பல படங்களில் தேவா பணியாற்றி பல்வேறு ஹிட் பாடல்களைக் கொடுத்துள்ளார். 90களின் பிரபலமான நடிகர்களை எடுத்துக் கொண்டால் தேவா உடன் ஒரு ஹிட் பாடலாவது கொடுத்திருப்பார்
காதல் கோட்டை திரைப்படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்றிருக்கும். இந்தப் படம் நடிகர் அஜித், நடிகை தேவையானிக்கு மட்டுமல்ல தேவாவின் கரியரிலும் முக்கியமான ஒன்று.
கடிதம் வழியாக மட்டுமே கதாநாயகனும் கதாநாயகியும் உரையாடிக் கொண்டிருக்கிறார்கள். படத்தின் க்ளைமாக்ஸில் சந்தித்துக் கொள்கிறார்கள், இதற்கிடையே படத்திற்கு நடுவே ஏக்கத்தில் இருக்கும் கதாநாயகனுக்கு ஆறுதல் சொல்வதைப் போல இந்தப் பாடல் அமைந்திருக்கும். இந்தப் பாடலை தேவாவே பாடியிருப்பார்.
அண்ணாமலை படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்றிருக்கும். இரண்டு நெருக்கமான நண்பர்களாக, செல்வந்த பின்னணி கொண்டவராக நடிகர் சரத்பாபுவும் எளிய பின்னணி கொண்டவராக நடிகர் ரஜினிகாந்தும் நடித்திருப்பார்கள்.
சந்தர்ப்ப சூழ்நிலையால் இருவரும் எதிரிகளாக மாற வேண்டிய நிலை உருவானது. சரத்பாபுவிடம் ரஜினிகாந்த் கூறுவதைப் போல இந்தப் பாடல் அமைந்திருக்கும்.
அவ்வை சண்முகி படத்தில் இந்த மெலடி பாடல் இடம்பெற்றிருக்கும். ஒரே பாடலில் கதாநாயகன் மற்றும் கதாநாயகி என இருவரின் உணர்வுகளையும் கடத்தும் வகை பாடல்களில் இது மிகவும் பிரபலமானது.
1993-ஆம் ஆண்டு வெளியான கட்டபொம்மன் திரைப்படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்றிருக்கும். எஸ்.பி பாலசுப்ரமணியன் மற்றும் கே.எஸ்.சித்ரா பாடியிருப்பார்கள். கச்சேரிகளில் மட்டுமல்ல பேருந்துகளின் ப்ளே லிஸ்டுகளிலும் இந்தப் பாடல் தவறாது இடம்பெற்றிருக்கும்.
நடிகர் சரத்குமார் நடித்துள்ள சாமுண்டி படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்றிருக்கும். எஸ்.பி பாலசுப்ரமணியன் மற்றும் ஜானகி இந்தப் பாடலை பாடியிருப்பார்கள். சரத்குமார்-தேவா காம்பினேஷனில் ஹிட்டான பாடல்களில் இதுவும் ஒன்று.
நடிகர் சரத்குமார் மற்றும் சுகண்யா நடித்த மகாபிரபு படத்தில் இந்த பாடல் இடம்பெற்றிருக்கும். எஸ்.பி பாலசுப்ரமணியன் - தேவா காம்பினேஷனில் ஹிட் அடித்த மெலடி பாடல்களில் இதுவும் ஒன்று.
காதல்கோட்டை திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் மெலடி பாடல் இது தான். கதாநாயகன், கதாநாயகி இருவரும் கடிதத்தின் மூலம் மட்டுமே பேசிக் கொண்டிருப்பார்கள். அப்படி எழுதப்படும் கடிதம் ஒன்றை அடிப்படையாக வைத்தே பாடல் அமைக்கப்பட்டிருக்கும்.
நடிகர் விஜய் நடித்துள்ள மின்சார கண்ணா படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்றிருக்கும். தேவா-ஹரிஹரன் கூட்டணியில் ஹிட் அடித்த மெலடி பாடல்களில் இதுவும் ஒன்று. சேர முடியாத காதலர்கள் தங்களின் ஆசைகளை வெளிப்படுத்துவதாக இந்தப் பாடல் அமைந்திருக்கும்.
சமீப நாட்களில் இந்தப் பாடல் இணையம் முழுவதும் ட்ரெண்ட் ஆன ஒன்று. நடிகர்கள் நெப்போலியன், குஷ்பூ மற்றும் ஊர்வசி நடித்த எட்டுப்பட்டி ராசா படத்தில் இந்த பாடல் இடம்பெற்றிருக்கும்.
இந்தப் பாடல் லியோ படத்தில் இடம்பெற்றதன் மூலம் மீண்டும் பிரபலமானது. 2000-ஆம் ஆண்டு வெளியான ஏழையின் சிரிப்பில் படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்றிருக்கும். நடிகர்கள் பிரபுதேவா மற்றும் கௌசல்யா இதில் நடித்திருப்பார்கள்.

