தூங்கிக்கொண்டிருந்த சிறுமி பாம்பு கடித்து பலி

 
தலைமைச் செயலகத்தினுள் மீண்டும் ஒரு  பாம்பு!

பொன்னேரியில் பாம்பு கடித்த மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Death

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த உப்பளம் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி பிரதாப் என்பவரது மகள் அக்க்ஷயா (17). இவர் அண்மையில் தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று கல்லூரி சேர்க்கைக்காக காத்திருந்தார். இன்று பிற்பகல் அக்க்ஷயா வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது அவரது காலில் பாம்பு ஒன்று கடித்துள்ளது. அக்க்ஷயாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த உறவினர்கள், உடனடியாக அவரை பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

அக்க்ஷயாவிற்கு பொன்னேரி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து மாணவி அக்க்ஷயா சடலம் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து பொன்னேரி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டில் தூங்கி கொண்டிருந்த மாணவி பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக பிணவறையில் மாணவி சடலத்தை பத்திரப்படுத்த குளிர்சாதன பேட்டி பழுதடைந்து உள்ளதால் தனியாரிடம் வாங்க வேண்டும் என மருத்துவமனை ஊழியர்கள் கூறியதால் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.