கடைக்கு வெளியே சென்று சிகரெட் குடிக்க சொன்ன பேக்கரி ஊழியர் மீது தாக்குதல்

 
attack

சிவகங்கை மாவட்டம்  மானாமதுரையில் பேக்கரியில் சிகரெட் பிடிப்பத தட்டி கேட்ட ஊழியர் மீது சராமாரியாக தாக்கி கடையை நொறுக்கிய நபர்களை போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தேடி வருகின்றனர். 

attack

மானாமதுரை கோர்ட் எதிரே செயல்பட்டு வரும் லட்சுமி பேக்கரியில் நேற்று இரவு கேக் வாங்க வந்த நான்கு இளைஞர்கள் கடைக்குள் அமர்ந்து சிகரெட் பிடித்துள்ளனர். அப்போது கடையில் இருந்த  ஊழியர் சதீஷ் என்பவர் கடைக்குள் சிகரெட் குடிக்க கூடாது என்றும் வெளியே செல்லுமாறும் கூறியுள்ளார். அதனை பொருட்படுத்தாத இளைஞர்கள் மேலும் அங்கு உட்கார்ந்து குடித்துக் கொண்டிருந்தனர்.

இதனை சதீஷ் மீண்டும் கண்டிக்கவே இதனால் ஆத்திரம் அடைந்த இளைஞர்கள் அங்கிருந்த கேக் வெட்டும் கத்தியை கொண்டும் மற்ற பொருட்களை கொண்டு சதீஷ் அடித்து தாக்கினார். விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மிக்சர் உள்ளிட்ட உணவு பொருட்களை எடுத்து வீசினர். இதில் சதீஷ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, மானாமதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மானாமதுரை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பேக்கரி அடித்து நொறுக்கிய  பில்லத்தியை சேர்ந்த ஆதி , மணி உள்ளிட்ட இளைஞர்களை தேடி வருகின்றனர். பேக்கரி கடையில் தகராறு செய்த கும்பல் போகும் வழியில் சோணையா கோயில் எதிரே நின்று கொண்டிருந்த முனியசாமி , சிவா ஆகியோரையும் தாக்கி மண்டையை உடைத்துள்ளனர்