மகாராஷ்டிராவில் நடுங்க வைக்கும் சாலை விபத்து! கண்டெய்னர் லாரியில் மோதி கடைக்குள் புகுந்த பகீர் சிசிடிவி!
மகாராஷ்டிரா மாநிலம் நான்டெட் மாவட்டத்தின் தர்மாபாத் தாலுகாவில் உள்ள பாப்லி பாட்டா (Babhli Phata) அருகே, 2026 நவம்பர் 19-ஆம் தேதி மாலை சுமார் 5.40 மணியளவில் நிகழ்ந்த கோர சாலை விபத்தில் 18 வயது இளைஞர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் உயிரிழந்தவர் தர்மாபாத் ரசிக் நகர், மங்னாலி பகுதியைச் சேர்ந்த ஸ்ரீநாத் கங்காதர் யெவதிவாட் (18) என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவருடன் பயணித்த ரத்னாலி பகுதியைச் சேர்ந்த தன்ராஜ் மினாஜி லக்மவாட் (20) என்பவர் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இரு இளைஞர்களும் மாருதி சுசுகி டிசையர் (MH 01 CT 0226) காரில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, எதிர்த் திசையில் வந்த கண்டெய்னர் லாரி (TG 16 T 4217) மீது நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி (CCTV) காட்சிகளின் அடிப்படையில் வெளியான தகவலின்படி, எதிரே வந்த லாரியைப் பார்த்ததும் கார் ஓட்டுநர் பிரேக் பிடித்தபோது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சறுக்கியுள்ளது. இதையடுத்து லாரியின் மீது மோதிய கார், சாலையோரத்தில் இருந்த கடை ஒன்றின் மீதும் மோதி நின்றது.
விபத்தில் சிக்கிய இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு தர்மாபாத் அரசு ஊரக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஸ்ரீநாத் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த தன்ராஜின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதால், மேல் சிகிச்சைக்காக அவர் வேறு மருத்துவமனைக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். விபத்துக்குள்ளான கார் மற்றும் கண்டெய்னர் லாரி ஆகிய இரு வாகனங்களையும் பறிமுதல் செய்துள்ள தர்மாபாத் போலீசார், லாரி ஓட்டுநரைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Nanded,Maharashtra - An 18-year-old youth lost his life and another person sustained serious injuries following a horrific head-on collision between a car and a container truck near Babhli Phata in Dharmabad taluka of Nanded district on Wednesday evening. The entire crash was captured on a nearby CCTV camera.
— NextMinute News (@nextminutenews7) November 20, 2026

