ஹெட்ஃபோன் வெடித்ததில் சிதறிய காது

 
tn

பாட்டு கேட்டு கொண்டிருந்த முதியவரின் காதிலேயே  ப்ளூடூத் ஹெட்ஃபோன் வெடித்து சிதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

phone

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவர், வீட்டில் படுத்துக்கொண்டு பாட்டு கேட்டுக் கொண்டிருந்தபோது, காதில் மாட்டியிருந்த ப்ளூடூத் ஹெட் போன் திடீரென வெடித்ததால் காதில் படுகாயம் ஏற்பட்டது.

tn

படுகாயம் அடைந்த முதியவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அவர் அனுமதிக்கப்பட்ட நிலையில், சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .