மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த நிர்வாகி எம்.என். எஸ். வெங்கட்ராமன் உயிரிழப்பு!!

 
tn

மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் எம்.என்.எஸ். வெங்கட்ராமன் மாரடைப்பு காரணமாக நேற்று இரவு உயிரிழந்தார். அவருக்கு வயது 65.

Death

தீக்கதிர் நாளிதழில் பதிப்பாளர் தலைமை பொது மேலாளராகவும் பணியாற்றி வந்த எம்.என்.எஸ். வெங்கட்ராமன்,  மார்க்சிஸ்ட் கட்சியின் விருதுநகர் மாவட்ட செயலாளராக பொறுப்பில் இருந்தவர்.  கம்பத்தில் நடைபெற்ற மேதின பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட இவர் மதுரையில் உள்ள தீக்கதிர் தலைமை அலுவலகத்திற்கு நேற்றிரவு திரும்பினார். அப்போது  பேருந்து நிலையத்தில் காத்திருந்த அவருக்கு  திடீரென  மாரடைப்பு ஏற்பட்டது.  இதையடுத்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்குள்  அவர் உயிர் பிரிந்தது.  மறைந்த வெங்கட்ராமனின் உடல்  விருதுநகரில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் கட்சியினர் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.  இதையடுத்து அவர் இறுதி சடங்குகள் அருப்புகோட்டை ரெட்டியபட்டி கிராமத்தில் இன்று மாலை நடக்கும் என்று தெரிகிறது.


இந்நிலையில் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில், "கண்ணீரால் கடக்க முடியா கொடும் இரவாய் மாறிவிட்டது நேற்றிரவு. தோழமை என்ற சொல்லின் பொருளாய் வாழ்ந்தவர். இயக்கத்துக்காய் இமைப் பொழுதும் சோராது உழைத்தவர். எண்ணிலடங்கா தோழர்களின் பெருந்தலைவனாய் வாழ்ந்து, வழிகாட்டியவர். அன்புத்தோழர் எம் என் எஸ் வெங்கட்ராமன் காலமானார்.செவ்வணக்கம்."என்று குறிப்பிட்டுள்ளார்.