“துரோகி வேலுமணி..” பொள்ளாச்சியில் இபிஎஸ்- வேலுமணி ஆதரவாளர்கள் இடையே தள்ளுமுள்ளு

 
ச்

பொள்ளாச்சி ஜெயராமன் வீட்டு துக்க நிகழ்வுக்கு  வந்த எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக முழக்கம் எழுப்பப்பட்டது.



முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தாயார் வயது மூப்பு காரணமாக காலமானார். இதனையடுத்து எடப்பாடி பழனிசாமி, நேரில் சென்று ஆறுதல் கூறி அவரது தாயார் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் முன்னாள் அமைச்சர் வேலுமணி மற்றும் கோவை மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.எம். வேலுசாமி ஆகியோர் உடன் சென்றனர்.

இதனிடையே அதிமுக முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமனின் தாயார் மறைவுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி இரங்கல் தெரிவிக்க வந்தபோது கூட்டத்தில் ஒருவர் துரோகி என கத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது பொள்ளாச்சியில் எடப்பாடி பழனிசாமி, எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.