3 பேருடன் அதிவேகத்தில் வந்த பைக்... லாரி மீது மோதியதில் பள்ளி மாணவன் பலி!
திருவள்ளூர் அடுத்த ஈக்காடு பகுதியில் வேகமாக வந்த இருசக்கர வாகனம் லாரி மீது மோதிய விபத்தில் பள்ளி மாணவன் பலியான சம்பவம் சோகத்தில் ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் அடுத்த மெய்யூர் பகுதியைச் சேர்ந்த ரிஷி -18 ராஜபிரியன்-18 ஆகியோர் ஆவடி பகுதியில் உள்ள சென் பீட்டர்ஸ் என்ற கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வருகின்றனர். இருவரும் இன்று மாலை கல்லூரி முடித்து இரு சக்கர வாகனத்தில் மெய்யூர் நோக்கி வந்துள்ளனர். அப்போது தனது ஊரைச் சேர்ந்த திருவள்ளூர் டிஆர்பிசி பள்ளியில் பயின்று வந்த எஸ்வந்த் (13) என்ற மாணவனை ஏற்றுக்கொண்டு இரு சக்கர வாகனத்தில் திருவள்ளூரில் இருந்து மெய்யூர் நோக்கி சென்றுள்ளனர்.திருவள்ளூர் அடுத்த ஈக்காடு பகுதியில் உள்ள புதிய மேம்பாலம் அருகே திருவள்ளூர் நோக்கி வளைவில் திரும்பிய போது, லாரியின் பின்னால் வேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதியதில் பள்ளி மாணவன் உட்பட்ட மூன்று பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர்.
பொதுமக்கள் பள்ளி மாணவன் எஸ்வந்த் உட்பட மூன்று பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்த நிலையில் பள்ளி மாணவன் எஸ்வந்த் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் சென் பீட்டர்ஸ் கல்லூரி சேர்ந்த மாணவர்கள் இருவரும் ஆபத்தான நிலையில் தற்பொழுது திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இந்த விபத்து குறித்து வீடியோ லாரியின் பின்னால் வந்த காரில் இருந்த கேமராவில் பதிவாகி உள்ளது

