தனக்கு எதிராக நீதிமன்றத்தில் சாட்சி சொன்ன நபரை கடுமையாகத் தாக்கிய ரவுடி! மாவுக்கட்டு போட்டுவிட்ட போலீசார்

 
ச்

கடலூரில் தனக்கு எதிராக நீதிமன்றத்தில் சாட்சி சொன்ன நபரை கடுமையாகத் தாக்கிய ரவுடியை போலீசார் துரத்தி சென்றபோது, தப்பி ஓட முயன்று, தவறிவிழுந்து கால் உடைந்தது. 


கடலூர் மாவட்டம் காராமணிக்குப்பம் பகுதியை சேர்ந்த சுகுமார் (55) என்பவர் கடந்த 2021 ஆம் ஆண்டு விஜய செல்வம் என்ற ரவுடி போலீசார் மீது தாக்கிய வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் சாட்சி கூறினார். இந்த நிலையில் ரவுடி விஜய் செல்வம் சுகுமாரிடம் சென்று எனக்கு எதிராக எதற்கு சாட்சி கூறினாய் என கூறி கடுமையாக தாக்கி கத்தியை காட்டி மிரட்டல் விடுத்துள்ளார். இந்த நிலையில் அதே நாளில் சகோதரி சுமதி வீட்டில் இரவு திடீரென்று உள்ளே புகுந்த விஜய் செல்வம் டிவியை அடித்து உடைத்து பொருட்களுக்கு தீ வைத்ததாக கூறப்படுகின்றது. இதனால் அதிர்ச்சிடைந்த சுகுமார் நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் சம்பவம் குறித்து புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

இந்த நிலையில் நத்தப்பட்டு மேம்பாலத்தில் சம்பந்தப்பட்ட விஜய் செல்வம் இருப்பதாக தகவல் கிடைத்ததின் பேரில் நெல்லிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் அவரை பிடிக்க விரட்டியபோது பாலத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் வலது கால் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து விஜய் செல்வத்தை கைது செய்து கடலூர் அரசு மருத்துவமனையில் தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.