எழும்பூரில் ரவுடி வெட்டிக் கொலை

 
yn

சென்னை எழும்பூர் மாண்டியத் சாலையில் ரவுடி சத்யா வெட்டிக் கொலை செய்யப்பட்டார். நேற்று இரவு இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் ரவுடி சத்யாவை மறைத்து வைத்திருந்த ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினர்.

murder

இதன் காரணமாக ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர். அத்துடன் ரவுடி சத்யாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.  

murder

கொலை செய்துவிட்டு தப்பிய மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீசி வருகின்றனர்.2020ல் நடந்த புளியந்தோப்பைச் சேர்ந்த ரவுடி நாய் ரமேஷ் கொலைக்குப் பழிக்குப் பழியாக சத்யா கொலை என போலீஸ் தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.