ராக்கெட் பட்டாசு விழுந்து 3 குடிசை வீடுகள் தீப்பற்றி எரிந்தன

 
கூரைவீடு

கும்பகோணம் அருகே கொரநாட்டு கருப்பூரில் ராக்கெட் விடும்போது குடிசை வீடு மீது பட்டு 3 குடிசை வீடுகள் தீப்பற்றிகள் எரிந்து சேதமடைந்தது.

தீபாவளி பண்டிகையானது இன்று நாடு முழுவதும் கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக தீபாவளி நாளின் போது காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் படி காவல்துறை பல்வேறு அறிவுறுத்தல்களை பொதுமக்களுக்கு வழங்கி உள்ளது. சீன பட்டாசுகள் மற்றும் 125 டெசிபலுக்கு மேல் ஒலி எழுப்பக்கூடிய பட்டாசுகளை வெடிக்கக்கூடாது என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடிப்பதை கண்காணிக்க சென்னை காவல்துறை சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டது.


இந்நிலையில் கும்பகோணம் அருகே கொரநாட்டு கருப்பூரில் ராக்கெட் விடும்போது குடிசை வீடு மீது பட்டு 3 குடிசை வீடுகள் தீப்பற்றிகள் எரிந்து சேதமடைந்தது. வீட்டில் இருந்த ஆவணங்கள், டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், கிரைண்டர் உள்ளிட்ட ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமானது. இதேபோல் காட்டுமன்னார்கோயில் பகுதியில் தீபாவளி பட்டாசு வெடித்து கூரை வீடு எரிந்தது. காந்தியார் தெருவை சேர்ந்த அசோக் என்பவரது கூரை வீட்டின் மேல் பட்டாசு பொறி பட்டு வீடு தீ பற்றி எறிந்தது. இதைப் பார்த்த அந்த பகுதி சேர்ந்த பொது மக்கள் உடனடியாக காட்டுமன்னார்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பெயரில் தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜவேல் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இருப்பினும் தீ கொழுந்து விட்டு எருந்துகூரை வீடு முழுவதுமாக கருகியது.