சாதி ஒழிப்புக் கொள்கையை தாங்கி நிற்கும் குடும்பம் கருணாநிதி குடும்பம்- ஆ.ராசா

 
Araja

பார்ப்பனியம். மற்றும் பிராமணியம் என்று சொல்வதெல்லாம் சாதி அடிப்படையிலானது அல்ல,  சமத்துவம், சகோதரத்துவம்.  மற்றும்  மனிதசுதந்திரம், இதற்கெல்லாம் எதிராக எதுவெல்லாம் உள்ளதோ அதுதான் பார்ப்பனீயம் என திமுக துணை பொதுச்செயலாரும் நீலகிரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினருமான ஆ. இராசா கூறியுள்ளார்.

முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு ஆ. ராசா எம்.பி. கடிதம்! | nakkheeran

திருச்சி மண்டல திமுக மாநில ஆதிதிராவிடர் நலக்குழு ஆலோசனை மற்றும் ஆய்வுக்கூட்டம் பெரம்பலூரில் இன்று நடைபெற்றது. தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ம.மதிவேந்தன் மற்றும் ஆதிதிராவிடர் நலக்குழு செயலாளர் அந்தியூர் செல்வராஜ் மற்றும் திருச்சி மண்டலத்திற்குட்பட்ட திமுகழநிர்வாகிகள் உள்ளிட்டோர்பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா, “அம்பேத்கருக்காக நாம் என்ன செய்தோம் என்ற விவாதமே தற்போது பெரிய பேசுபொருளாகியுள்ள நிலையில் அம்பேத்கருக்காக மணிமண்டபம், அமைப்பது, அவரது பெயரில் பல்கலைகழகங்கள் அமைப்பதெல்லாம் அம்பேத்கர் கொள்கையை ஏற்கும்  கருத்தியியல் அடிப்படையில் கிடையாது அவை எல்லாம் அரசியல் அடையாளத்திற்கானவை யாக இருக்கலாம். ஆனால்அம்பேத்கரை இந்தியாவில் கொள்கை ரீதியகவும், கருத்தியியல ரீதியாகவும் கொண்ட ஒரே கழகம் திராவிட கழகமே, அம்பேத்கரை ஏற்ற எத்தனையோ தலித் அமைப்புகளுக்கும் இல்லாத கருத்தியியல் தொடர்பில் பெரியார் பயணித்தார். சகமனிதர்களில்  உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்று எவனும் கிடையாது என்ற தத்துவத்தை அடிப்படையாக கொண்டது தான் திராவிட இயக்கம்.

பார்ப்பனியம் என்பது சாதியை அப்படையாக கொண்டது அல்ல, சமத்துவம், சுதந்திரம் சகோதரத்துவம். இதற்கெல்லாம் எதிராக எது உள்ளதோ அதுவெல்லாம்  பார்ப்பனியம் தான், ஒரு தலித் தனக்கு கீழ் ஒரு சமூகம் உள்ளதாக பேசினான் என்றால் அவனும் பார்பனியன் தான். இந்தியாவில்  ஆங்கிலேயர் காலத்தில் இரட்டை வாக்குரிமை அமலிலிருந்தது.அம்பேத்கரும் பெரியாரும் இல்லாவிட்டால் இன்று சமத்துவம் என்பதே வந்திருக்காது.

DMK MP A Raja has praised DMK Chief MK Stalin.

கருணாநிதி ஒரு சமூக நீதிக்கான தலைவர் அல்ல, அவர் சாதி ஒழிப்பினை கொள்கையாக கொண்ட அம்பேத்கரையும், பெரியாரையும் தாங்கி நிற்கும் குடும்பமாக கருணாநிதி குடும்பம் உள்ளது. சாதி ஒழிப்புக் கொள்கையை கொண்டவர்கள்கழகத்தின் தலைவனாக இருந்தாலும் மகனாக இருந்தாலும் பேரனாக இருந்தாலும் அவர்களை ஏற்றுக்கொள்வோம். சாதி ஒழிப்புக் கொள்கையை கொண்ட ஒரு குடும்பத்தை விரும்புகிறோம், அதைபோல் வேறு குடும்பத்தை காட்டச் சொல்லுங்கள் அதுவரை இந்த குடும்பமே ஆட்சி செய்யட்டும்” என்றார்.