"கூட்டணி குறித்து அதிமுகவுடன் பேசவில்லை"- ஆ.ராசா

 
  ஆ.ராசா

கூட்டணி அமைத்து ஆட்சி அமைப்பது தொடா்பாக எங்கள் தலைவா்கள் யாரும் அதிமுகவிடம் பேசவில்லை  என திமுக எம்.பி. ஆ.ராசா கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஆ.ராசா, “கையில் ஒரு மதம், நெத்தியல் ஒரு மதம்.. பதவியேற்கும் போது ஒரு மதமா? நீங்க சாதி பாத்து வேட்பாளர போடவே இல்லையா? அதிமுகவின் ஒரு அணியினரை சந்தித்து சால்வை போட்டு ஆதரவு கேட்டது தில்லு முல்லு இல்லையா? தற்போதைய சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு முந்தைய அரசை எப்படி முதலமைச்சர் விஜய் குறைகூற முடியும்? காவல்துறை முதலமைச்சரின் கையில் தானே உள்ளது. யாரிடம் பாசம் அதிகம் வைத்தோமோ அவர்கள் மீது முரண் வரும், விமர்சனம் வரும். விசிக மீது பாசம் வைத்திருந்தோம். விசிக மீது கொள்கை ரீதியான பிணைப்பு இருந்தது. விசிக, திமுக அண்ணன் தம்பி போல் இருந்தோம். மீண்டும் சேருவோம்.

கூட்டணி அமைத்து ஆட்சி அமைப்பது தொடா்பாக எங்கள் தலைவா்கள் யாரும் அதிமுகவிடம் பேசவில்லை. 2ஆம் கட்ட தலைவா்கள் கூட்டணி குறித்து பேசியிருக்கலாம், எங்கள் தலைவா் பேசவில்லை. அல்லு சில்லு என அதிமுகவினரை சொல்லிவிட்டு, அவர்களின் வீட்டுக்குச் சென்று ஆதரவு கேட்டது தில்லு முல்லு இல்லையா? வாக்குறுதிகளை அளித்துவிட்டு தற்போது அதனை நிறைவேற்றாமல் தவெக அரசு புதுப்புது விளக்கங்களை சொல்கிறது. ஆர்பிஐ விதி தெரியாமலா பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பை வெளியிட்டார்கள்? விஜய்க்கு அந்த அதிகாரமும் இல்லை, அனுமதியும் இல்லை. பாயாசத்தை முடிச்சிட்டீங்க சரி.. பாசிசம் என்னாச்சு ப்ரோ? தவெக தேர்தல் அறிக்கையில் நாணயம் இருக்கா? கச்சத்தீவு பத்தி கேட்டா No Comments-னு சொல்வதா?” எனக் கேள்வி எழுப்பினார்.