மக்களவை தொகுதி மறுசீரமைப்பு செய்தால் தென்மாநிலங்களின் குரல் நசுக்கப்படும்- ஆ.ராசா

 
ஆ.ராசா

மக்களவை தொகுதி மறுசீரமைப்பு செய்தால் நாடாளுமன்றத்தில் தென்மாநிலங்கள் பிரதிநிதித்துவத்தை இழக்கும் என எம்.பி. ஆ.ராசா விளக்கம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்.பி. ஆ.ராசா, “மக்களவை தொகுதி மறுசீரமைப்பு செய்தால் நாடாளுமன்றத்தில் தென்மாநிலங்கள் பிரதிநிதித்துவத்தை இழக்கும். மக்கள் தொகை அடிப்படையில் வட மாநிலங்களுக்கு அதிக தொகுதிகளை வழங்கினாலும் தமிழ்நாட்டுக்கு அநீதிதான். மக்கள் தொகை அடிப்படையில் மட்டுமே தொகுதி மறுசீரமைப்பு செய்யக் கூடாது. மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதால் தமிழ்நாட்டுக்கு தண்டனையா? மக்கள் தொகையை கட்டுப்படுத்தி இருக்கிறோம். அதனால் வளர்ச்சிப் பணிகளில் முன்னேறி இருக்கிறோம். பல்துறைகளில் தமிழ்நாடு நம்பர் இடத்தில் இருக்கிறது. இப்படி முன்னேறி இருக்கும்போது சட்டப்படி எங்களை தண்டிப்பது ஜனநாயகத்திற்கு உகந்தது அல்ல. தொகுதி மறுவரையறை தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா குழப்பமான பதில் அளித்துள்ளார். தமிழ்நாட்டில் எம்பி தொகுதிகளை குறைக்காமல் வடமாநிலங்களில் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.  விகிதாச்சார அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை என கூறியுள்ளது குழப்பியுள்ளது. 

வடமாநிலங்களுக்கு தொகுதிகளை அதிகரித்தால் தமிழ்நாடு போன்ற தென் மாநிலங்களின் குரல் நசுக்கப்படும். தமிழ்நாட்டுக்கு 39 தொகுதிகள் நீடித்து வடமாநிலங்களுக்கு தொகுதிகளை அதிகரித்தாலும் பாதிப்புதான் ஏற்படும். தொகுதிகள் குறையாவிட்டால் புதிய நாடாளுமன்றத்தில் இருக்கைகளின் எண்ணிக்கையை 880 ஆக உயர்த்தியது ஏன்” எனக் கேள்வி எழுப்பினார்.