கரூரில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி தொடங்கியது..!
கரூர் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு முதலமைச்சர் விஜய் வந்தடைந்தார். தவெக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு உயிரிழந்தோரின் குடும்பத்தினர் வருகை தந்துள்ளனர். முதல்வர் வருகையைத் தொடர்ந்து, உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை நியமன ஆணைகள் வழங்கப்பட உள்ளன.
மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தொகுத்து வழங்கினார். பால் வளத்துறை அமைச்சர் விஜயலெட்சுமி வரவேற்புரை ஆற்றினார். பின்னர் கரூர் மாவட்ட தவெக செயலாளர்கள் மதியழகன் மற்றும் பாலா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தொடர்ந்து கிருஷ்ணராயபுரம் தொகுதி எம்எல்ஏ சத்யா உரையாற்றினார்.
முதலமைச்சர் விஜய் நிகழ்ச்சியில் இருந்து செய்தியாளர்கள் வெளியேற்றப்பட்ட நிலையில், அவர்களுக்காக வைக்கப்பட்டிருந்த பாதையும் அடைக்கப்பட்டுள்ளது. ஏன் தங்களை அனுமதிக்கவில்லை? என கேட்டு அமைச்சர் ஆனந்திடம் செய்தியாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசாரிடமும் பேசி விட்டு வருகிறேன் என கூறி சென்ற அமைச்சர் ஆனந்த், பேசியதற்கு பிறகு எந்த பதிலையும் கூறாமல் சென்றார்.

