உயர் இரத்த அழுத்தத்தை குணப்படுத்துவதில் நம்பிக்கை தரும் புதிய மருந்து!

 
s

உயர் இரத்த அழுத்தத்தை குணப்படுத்துவதில் நம்பிக்கை தரும் புதிய மருந்து - New England Journal of Medicine இதழில் வெளியான சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

பொதுவாக  இளம் வயதினர் பலரும் உயர் இரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்கின்றனர் .இன்னும் பலர் அதன் அறிகுறிகளை அலட்சியப்படுத்தி விட்டு நோய் முற்றியவுடன் சிகிச்சைக்கு செல்கின்றனர். இதனால் பல உறுப்புகள் செயலிழப்புக்கு ஆளாகின்றனர். இந்த நோயை அலட்சியடுத்தினால் இதன் விளைவாக ஹார்ட் அட்டாக், பக்கவாதம், சிறுநீரக செயலிழப்பு போன்ற நோய்கள் உண்டாகிறது. 

இந்நிலையில் உயர் இரத்த அழுத்தத்தை குணப்படுத்துவதில் நம்பிக்கை தரும் புதிய மருந்து - New England Journal of Medicine இதழில் வெளியான சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. உயர் இரத்த அழுத்தத்தை குணப்படுத்தக் கூடிய BAXDROSTAT என்ற புதிய மருந்து குறிப்பிடத்தக்க பலன்களை அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதை சில மாதங்கள் எடுத்துக் கொண்ட பிறகு நிறுத்திய பல நோயாளிகளுக்கு இரத்த அழுத்தம் 2 ஆண்டுகள் வரை இயல்பான நிலையிலேயே தொடர்ந்தது. அமெரிக்க அரசின் ஒப்புதல் பெற்றுள்ள இம்மருந்து, பிரிட்டனில் பரிசீலனையில் உள்ளது.