"நாளை மறுநாள் வளைகாப்பு" - ரயிலில் தவறி விழுந்த கர்ப்பிணி பலி

 
tn

விருத்தாச்சலம் அருகே கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்து கர்ப்பிணி பெண் பரிதாபமாக  பலியாகியுள்ளார். 

pregnancy

வாந்தி வந்ததால், காற்றோட்டமாக ரயிலின் கதவு ஓரத்தில் நின்று வாந்தி எடுக்க முற்பட்டபோது தவறி விழுந்துள்ளார்.  அபாய சங்கிலி வேலை செய்யாததால், குடும்பத்தினர் அடுத்த பெட்டியில் இருந்து அபாய சங்கிலியை இழுத்தனர்.  

tn

ரயில் 8 கி.மீ. தொலைவு கடந்து விட்டதால் உடலை தேடி எடுப்பதற்கு 3 மணி நேரமானது.நாளை மறுநாள் சங்கரன்கோவிலில் வளைகாப்பு நடைபெற இருந்த நிலையில் கர்ப்பிணி பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.