மதுராந்தகம் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்தவர் கைது

 
மத்திய மண்டலத்தில் 94 கிராமங்களில் முழுமையாக கள்ளச்சாராயம் ஒழிப்பு… ஐ.ஜி., பாலகிருஷ்ணன் தகவல்!

மழுவங்கரணை கிராமத்தில் கள்ளத்தனமாக பட்டை சாராயம் ஊரல் போட்டு நாட்டு சாராயம் காய்ச்சப்படுவதாக வந்த தகவலின் அடிப்படையில் போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்,

Image

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே மழுவங்கரணை கிராமத்தில் கள்ளத்தனமாக பட்டை சாராயம் ஊரல் போட்டு நாட்டு சாராயம் காய்ச்சப்படுவதாக சித்தாமூர் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த சூனாம்பேடு காவல் ஆய்வாளர் அமிர்தலிங்கம், மேல்மருவத்தூர் காவல் ஆய்வாளர் ஏழுமலை ஆகியோர் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடியாக ஆய்வு நடத்தி நாட்டு கள்ளச்சாராயம் காய்ச்சிய தேவன் என்பவரை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். மேலும் தேவன் என்பவர் விவேக் கிராமத்தை சேர்ந்தவர் என்றும் இவர் கரிசூலை போட்டு கரி விற்பனை செய்து வருகிறார்.இவர் கழனி வெளியில் பதுக்கி வைத்திருந்த 200 லிட்டர் ஊரல், மற்றும் காய்ச்சிய சாராயம் 20 லிட்டர் ஆகியவற்றை கைப்பற்றி மதுராந்தகம் மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

மேலும் இவர் வேலை செய்யும் மழுவங்கரனை குறும்புறை கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளர்கள் இந்த நாட்டு  கள்ளச்சாராயத்தை குடித்ததாக தெரிகிறது. கள்ளச்சாராயத்தை குடித்த மணி, பெருமாள், அய்யனார் உள்ளிட்ட 3 பேருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவர்களுக்கு எவ்வித பாதிப்பு இல்லை என மருத்துவர்கள் தகவல். மேலும், வேறு யாரேனும் கள்ளச்சாராயம் குடித்துள்ளார்களா என  வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.