சித்திரைத் திருவிழா நடந்த பகுதியில் ஒருவர் கொலை

 
murder

மதுரை சித்திரைத் திருவிழா நடந்த பகுதியில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

madurai

உலக புகழ்பெற்ற சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான இன்று  கள்ளழகர் ஆற்றில் எழுந்தருளினார். அதன்படி  இன்று அதிகாலை 5.50 மணிக்கு கோவிந்தா கோஷம் விண்ணை பிளக்க  தங்க குதிரையில் பச்சை நிற பட்டுடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளினார். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பல்லாயிரகணக்கான பக்தர்கள் அழகர் மீது தண்ணீரை பாய்ச்சி அடித்து  மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

murder

இந்நிலையில்  மதுரை கள்ளழகர் சித்திரைத் திருவிழா நடந்த பகுதியில் இருவருக்கு கத்திக்குத்து ஏற்பட்டுள்ளது. இதில் சிகிச்சைப்பெற்று வந்த ஒருவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஆழ்வார்புரத்தைச் சேர்ந்த கார்த்திக், சிவகங்கையைச் சேர்ந்த சோனையை மர்ம நபர்கள் கத்தியால் குத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.