ஸ்பெஷல் டே... முதல்வர் வீட்டில் நாளை தலைவர்களுக்கு விருந்து

 
s

முதல்வர் திருமணநாளை முன்னிட்டு வைகோ, திருமாவளவன், முத்தரசன், ஈஸ்வரன் உள்ளிட்ட தலைவர்களுக்கு முதல்வர்  இல்லத்தில் நாளை விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Image

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 50-வது திருமணநாளை முன்னிட்டு, தங்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்த தோழமை இயக்க தலைவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை, தனது இல்லத்தில் விருந்து ஏற்பாடு செய்துள்ளார். முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், “உயிரென உறவென திருமிகு துர்கா அவர்கள் என்னில் பாதியாய் இணைந்து 50 ஆண்டுகள் ஆகின்றன ♥️ இத்தருணத்தில் பேரன்புகொண்டு இல்லம்தேடி வந்து எங்களை வாழ்த்திய கொள்கை உறவுகளான தோழமை இயக்கத் தலைவர்களுக்குக் குடும்பப் பாச உணர்வுடன் நன்றி கூறி அகமகிழ்கிறேன்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.