தின்னரை குடித்த ஒன்றரை வயது குழந்தை பலி - செங்கல்பட்டில் அதிர்ச்சி

 
ச் ச்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே பெயிண்ட்டில் கலக்கும் தின்னர் திரவத்தை தவறுதலாகக் குடித்த ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே பெயிண்ட்டில் கலக்கும் தின்னர் திரவத்தை தவறுதலாகக் குடித்த ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேவதூர் கிராமத்தில் வினோத்குமார் என்பவரின் மகள், தவறுதலான தின்னரை குடித்த நிலையில், கடந்த 7 நாட்களாக செங்கல்பட்டு மருத்துவக்கல்லூரியில் சிகிச்சையில் இருந்த குழந்தை இன்று உயிரிழந்தார். தின்னர் குடித்த குழந்தை உயிரிழந்தது தொடர்பாக சித்தாமூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.