‘சாதிக்க தடையில்லை’- தமிழில் பட்டம் பெற்ற ஒன்றரை அடி உயர இளைஞர்...

 
ச்

பட்டம் பெறுவதற்கு உயரம் தடையல்ல என்று நிரூபித்துள்ளார் இரண்டரை உயரமே உள்ள கிராமத்து இளைஞர்.

காரைக்குடி அருகே வித்யாகிரி கலை அறிவியல் கல்லூரியில்  இன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழா நடைபெற்றது. அழகப்பா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா அரங்கில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் துணைவேந்தர் ரவி மற்றும் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினர். விழாவில் பிஏ தமிழ் பாடப்பிரிவில் அழகப்பா பல்கலைக்கழக பட்டம் பெற்ற சீர் கலைக்காடு பகுதியை சேர்ந்த இரண்டரை அடி உயரமே உள்ள மாரிமுத்து,  இளங்கலை தமிழ் (BATamil) பட்டம் பெற்றார். மாரிமுத்துவின் தந்தை பெட்டிக்கடை வைத்து தொழில் செய்து வரும் நிலையில், மாரிமுத்து அங்குள்ள அரசு பள்ளியில் பயின்று பின் அப்பகுதியில் உள்ள வித்யாகிரி கல்லூரியில் படித்து பட்டம் பெற்றுள்ளார். சாதிப்பதற்கு தடையேது என்பதை நிரூபித்து காட்டிய மாரிமுத்து, தனது குறையை சுட்டிக்காட்டி வேலை தர மறுப்பதாக கூறுகிறார். மேலும் தனக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தர அரசு உதவ வேண்டும் என்றும் மாரிமுத்து கோரிக்கை விடுத்துள்ளார்.

திருவள்ளுவர், விவேகானந்தர், பாரதி என எல்லோரும் வழியுறுத்தும் ஒருவர் வாழ்க்கையில் முன்னேற கல்வி ஒன்று தான் வழி என்பதை உயரம் தடையல்ல என்பதை நிருபித்து பட்டம் பெற இரண்டரை உயரமுள்ள மாரிமுத்து என்ற கிராமத்து இளைஞர் நிரூபித்துள்ளதாக குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் கூறியுள்ளார்.