மின் கோபுரத்தில் வேலை செய்த வடமாநில தொழிலாளர் மின் கம்பில் விழுந்து உயிரிழப்பு

சீர்காழி அருகே உயர் அழுத்த மின் கோபுரத்தில் வேலை செய்த வடமாநில தொழிலாளர் மின்சார கம்பில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெய்வேலியிலிருந்து உயர் அழுத்த மின்கோபுரங்கள் அமைத்து காரைக்காலுக்கு 220 கிலோ வாட் உயரழுத்த மின்சாரம் செல்கிறது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வள்ளுவக்குடி பகுதியின் அமைந்துள்ள மின் கோபுரத்தில் சென்னையை சேர்ந்த ஸ்ரீ கிருஷ்ணா பவர் கம்பெனியின் ஊழியர்கள் வேலை செய்து வந்தனர். ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சந்தோஸ் குமார் மாக் டூ என்பவர் பிட்டராக வேலை செய்து வருகிறார். மின் கோபுரத்தில் பழுது பார்த்துக்கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக தவறி மின் கம்பியில் விழுந்துள்ளார்.
சக ஊழியர்கள் கயறு கட்டி கீழே இறக்கி சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை அடுத்து உடற்கூறு ஆய்வுக்காக பிணைவரையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் சீர்காழி போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.