வந்தாச்சு புது அப்டேட்...! இனி UPI-ல் பணம் செலுத்த இன்டர்நெட் தேவையில்லை..!
UPI பேமெண்ட்களில் சில சிக்கல்களும் இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று பணம் செலுத்துகையில் நெட்வர்க் இழப்பது. இப்போது வரை UPI வாயிலாக பணம் செலுத்த வேண்டுமென்றால் அதற்கு நம் மொபைல் நெட்வர்க் இணைப்பு வசதியுடன் இருக்க வேண்டும் எனப்து அர்த்தம். தற்போது, மொபைல் நெட்வர்க் இல்லாத இடங்களீல் கூட, தடையற்ற பரிவர்த்தனைகளை நோக்கிய அடுத்த படியை, NPCI எடுத்து வைத்துள்ளது.
இவர்களின் கூற்றின்படி, தற்போது புதிய ஆஃப்லைன் UPI பணப்பரிவர்த்தனை அம்சம் டெஸ்டிங்கில் இருக்கிறது. இது, பயணாளர்கள் இணைய வசதி இல்லாமலேயே, பணப்பரிவர்த்தனை செய்யப்போகும் முனையங்களில் தங்களின் ஸ்மார்ட் போன்களை Tap செய்வதன் மூலம் வணிகர்களுக்கு பணம் செலுத்த முடியும்.
இந்த தொழில்நுட்பம், அருகாமையில் இருக்கும் டிவைஸ்களுடன் பேமெண்ட் செய்ய உதவும். நெட்வர்க் குறைவாக இருக்கும் இடங்கள், நெட்வர்க்கே இல்லாத இடங்கள், விமானங்கள், அண்டர் க்ரவுண்ட் மெட்ரோ நிலையங்கள், கிராமப்புறங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உதவியாக இருக்குமாம். இது தொடர்பாக NPCI, 2026-ஆம் ஆண்டில் முக்கிய உற்பத்தியாளர்களிடமிருந்து இணக்கமான விற்பனை முனையங்களுக்கு (PoS) சான்றளிக்கத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது, வணிகர்கள் இந்த அம்சத்தை பெருமளவில் ஆதரிக்க வழிவகுக்கும்.
இந்த அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டால், இந்தியாவின் ரியல்டைம் பணப்பரிவர்த்தனை தளம், UPI-ன் திறன்களின் பிரிதொரு விரிவாக்கமாக இது அமையும்.
ஆஃப்லைன் பணப்பரிவர்த்தனை எவ்வாறு செயல்படும்?
தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த அம்சம், UPI லைட்டை மையமாக கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இது, பயனர்கள் குறைந்த மதிப்பிருக்கும் பரிவர்த்தனைகளுக்காக தங்கள் மொபைலில் இருந்து சிறிய அளவிளான பண இருப்பை மெயிண்டெயின் செய்து கொள்ள அனுமதிக்கிறது.
இதை பயன்படுத்து, பயணாளர்கள் முதலில் ஆஃப்லைன் செல்லும் முன்பு இணையத்துடன் மொபைல் இணைக்கப்பட்டிருக்கும் போதே தங்களின் UPI லைட் வாலட்டில், பணத்தை ஏற்ற வேண்டும். அந்த பணம், உங்கள் மொபைலில் ஏறிய பிறகு NFC வசதிகொண்ட POS ஸ்மார்ட் ஃபோனை பரிவர்த்தனை செய்ய வேண்டிய டிவைசில் Tap செய்வதன் மூலம் பணத்தை செலுத்த முடியும். இதற்கு இணைய வசதி தேவை என்பதோ, UPI PIN செலுத்த வேண்டும் என்கிற அவசியமோ இல்லை.

