கொளத்தூரை தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய் வட்டம்

 
கொளத்தூர்

கொளத்தூரை தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய் வட்டத்தை உருவாக்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

Constituency Overview: Kolathur Assembly constituency | தொகுதி கண்ணோட்டம்:  கொளத்தூர் சட்டமன்ற தொகுதி

கொளத்தூரை தலைமை இடமாக கொண்டு புதிய வருவாய் வட்டத்தை உருவாக்கி தமிழ்நாடு அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை உத்தரவிட்டுள்ளது. இதன்படி அயனாவரம் வருவாய் வட்டத்தில் இருந்து கொளத்தூர் வருவாய் வட்டம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. 6.24 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட கொளத்தூர் வட்டத்தில் கொளத்தூர், பெரவள்ளூர், சிறுவள்ளூர் உள்ளிட்ட மூன்று கிராமங்கள் உள்ளது.  3,78,168 பொதுமக்கள் வசிக்கும் கொளத்தூர் வட்டத்தில் பொதுப் பிரிவு,  சமூக பாதுகாப்பு பிரிவு, நகர்ப்புற நிலவரித் திட்டம், வட்ட கலால் அலுவலகம், நில அளவை பிரிவு உள்ளிட்ட அரசுத்துறை அலுவலகங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. 

Image

இதன்படி வட்டாட்சியர், துணை வட்டாட்சியர், முதுநிலை மற்றும் இளநிலை வருவாய் ஆய்வாளர், தட்டச்சர், ஓட்டுநர் உள்ளிட்ட 36 பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், 2024 - 2025 ஆண்டில் மீதமுள்ள 8 மாதங்களுக்கு தொடர் செலவினங்களுக்கு 1.93 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொடரா செலவினங்களுக்கு 32 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.