பாலோவர்ஸ்களைப் பிடிக்க புது பிளான்... இன்ஸ்டாவில் பாலோ செய்தால் ப்ளூடூத் நெக்பேண்ட் இலவசம்..!

 
1

MY MADURAI என்ற பெயரில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா ஐடியை தொடங்கி மதுரை மக்களை நம்பி வந்துருக்கேன் என கூறி செண்டிமெண்டலாக பாலோவர்ஸ்களை பெறுவதற்காக வீடியோக்களை பதிவிட்டுவந்தார் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை சேர்ந்த செல்வா (20). பரிசு கொடுத்தால் பாலோவர்ஸ்களை புடித்துவிடலாம் என நினைத்து மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட், தெப்பக்குளம் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் கல்லூரி மாணவிகளை குறிவைத்து தனது இன்ஸ்டா, பேஸ்புக் பக்கத்தை பாலோ அப் செய்திருந்தால் ப்ளுடூத் பரிசு அளித்து வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.

இந்நிலையில் காலை 10 மணிக்கு பாலோவர்ஸ்களை பிடிப்பதற்காக பெரியார் பஸ் ஸ்டாண்டில் பாலோவர்களுக்கு நிறைய ப்ளூடூத் நெக்பேண்ட் தருவதாக முன்னதாக வீடியோ வெளியிட்டிருந்தார். அந்த வீடியோக்களை பார்த்த இளைஞர்கள், இளம்பெண்கள் சிலர் காலை 10 மணிக்கு பெரியார் பஸ்ஸ்டாண்டில் குவிந்தனர். இதனை பார்த்த திடீர் நகர் காவல்துறையினர் கொத்தாக ரீல்ஸ் இளைஞர் செல்வாவை தூக்கி விசாரணை நடத்த தொடங்கினர். பின்னர் அனுமதி இல்லாமல் பொதுமக்களை கூட்டக்கூடாது என அறிவுரை வழங்கினர்.