உருவாகும் புது கடல்..! கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா குளிர் பிரதேசங்களாக மாறும்..!

 
1

இந்த உலகம் பல ஆச்சரியங்களையும் மர்மங்களையும் உள்ளடக்கியது.. பூமி குறித்து நாம் தொடர்ச்சியாகப் பல ஆய்வுகளைச் செய்து வருகிறோம். ஒவ்வொரு ஆய்விலும் நாம் புது புது விஷயங்களைக் கண்டறிந்து வருகிறோம்.

இப்போது உலகில் பசிபிக், ஆர்டிக், இந்தியப் பெருங்கடல் மொத்தம் ஏழு பெருங்கடல் இருக்கிறது. இதனிடையே புதிதாக ஒரு பெருங்கடல் உருவாக வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

வரும் காலத்தில் ஆப்பிரிக்கா படிப்படியாக இரண்டு தனித்தனி பகுதிகளாகப் பிரியும் என்றும் இதனால் புதிய கடல் உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கிழக்கு ஆபிரிக்காவில் ஏற்படும் பிளவு காரணமாக இது ஏற்படுவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கிழக்கு ஆப்பிரிக்கப் பிளவு என்பது 2005இல் எத்தியோப்பியா பாலைவனத்தில் தோன்றிய 56 கிலோமீட்டர் நீளமுள்ள ஒரு விரிசலாகும். இதுவே மெல்லப் பெரிதாகி ஆப்பிரிக்கக் கண்டத்தையே பிரிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இது நிச்சயம் ஆப்பிரிக்கக் கண்டத்தைப் பிளக்கும் என்றும் இதை நம்மால் தடுக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளனர். இதனால் தற்போது நிலத்தால் சூழப்பட்ட நாடுகளாக இருக்கும் உகாண்டா மற்றும் ஜாம்பியா உள்ளிட்ட நாடுகள் அருகே கடல் வந்துவிடும்.

சோமாலி மற்றும் நுபியன் டெக்டோனிக் தகடுகள் விலகிச் செல்வதே கடல் மட்டுமன்றி கிழக்கு ஆபிரிக்காவை ஒரு புதிய கண்டமாகவும் மாற்றும். இது தற்போதைய சோமாலியா, கென்யா, எத்தியோப்பியா, தான்சானியா நாடுகளை உள்ளடக்கியதாக இருக்கும். ஏடன் வளைகுடா, செங்கடல் ஆகியவை காரணமாக எத்தியோப்பியா, கிழக்கு ஆப்பிரிக்கப் பள்ளத்தாக்கில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். இவைதான் புதிய கடலை உருவாக்கும் என்று கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர் கென் மெக்டொனால்ட் தெரிவித்துள்ளார்.

மேலும், ஆப்ரிக்க கண்டத்தில் ஏற்பட்ட இந்த பிளவு இந்தியாவின் அரபிக்கடல் பகுதியில் இருக்கும் மாநிலங்களில் எதிரொலிக்குமாம். இந்த நில பிரிவுனால் உருவாகும் புதிய மலைகள் காரணமாக கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் குளிர் பிரதேசங்களாக மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதாவது, காஷ்மீர் போல மாறி விடுமாம். ஆனால், இந்த மாற்றம் நிகழ லட்ச வருடங்கள் ஆகும் என்கின்றனர் அறிவியலாளர்கள்.