நவ.12 தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு!
வரும் 12-ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார்.
வரும் 12-ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார். தாழ்வு பகுதி படிப்படியாக வலுவடைந்து, தாழ்வு மண்டலமாக தமிழ்நாடு கடற்கரை நோக்கி நகரக்கூடும் என்றும், இதன் காரணமாக நவ.15 முதல் 20ம் தேதி வரை வடகிழக்கு பருவமழை தீவிரமடைய வாய்ப்புள்ளதாகவும் தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் கூறியுள்ளார்.
(09.11.2026) முதல் (11.11.2026) வரை 3 நாட்களுக்கு காவிரி டெல்டா & தென் கடலோர மாவட்டங்களான காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிதமானது முதல் சற்றே கனமழையும், ஒரிரு இடங்களில் கனமழையும் பதிவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடலூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், தேனி, தென்காசி போன்ற மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழை பதிவாகும் என்றும் சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்கள் & வடக்கு உள் மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு மழையின் தாக்கம் குறைந்து இரவு நேர பனிப்பொழிவு அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

