வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது - வானிலை ஆய்வு மையம் தகவல்!

 
காற்றழுத்த தாழ்வு பகுதி

வடமேற்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடமேற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வந்த வளிமண்டல மேலடுக்கு சுழறிச்சி வழுப்பெற்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று ஒடிசா மற்றும் தெற்கு ஜார்கண்ட பகுதியை நோக்கி நகரக்கூடும் எனவும், இதன் காரணமாக ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் அடுத்த சில நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு ஐயம் தெரிவித்து உள்ளது. ஏற்கனவே குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநிலங்களில் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

rain

இதனிடையே   மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.