PF கணக்கில் கூடுதல் பணம் செலுத்த புதிய வசதி?- மத்திய அரசு பரிசீலனை

 
அரிய வாய்ப்பு..  ரூ. 47,000 சம்பளத்தில் EPFO நிறுவனத்தில் வேலை..

பி.எஃப். கணக்கில் கூடுதல் பணம் செலுத்த புதிய வசதியை மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. 


பி.எஃப். கணக்கில் கூடுதல் பணம் செலுத்த புதிய வசதியை மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. அதன்படி, நிறுவனத்தின் உதவியின்றி, தொழிலாளர்களே தங்கள் பி.எஃப். கணக்கில் நேரடியாகக் கூடுதல் தொகையைச் செலுத்தும் வசதியை அறிமுகப்படுத்த இ.பி.எஃப்.ஓ. பரிசீலித்து வருகிறது. அதன்படி யு.ஏ.என். எண் மூலம் நேரடியாகக் கூடுதல் தொகை செலுத்தலாம். இதன் மூலம் ஒய்வுக்கால சேமிப்பை அதிகரித்து, பி.எஃப். வட்டி பெறலாம்.

பகுதி நேரத் தொழிலாளர்கள் மற்றும் ஃப்ரீலான்சர்கள் பெறும் டிப்ஸ் தொகையையும் பி.எஃப் கணக்கில் செலுத்தும் வசதியும் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்குப் பிறகே திட்டம் அமலுக்கு வரும். கூடுதல் டெபாசிட்டுக்கான வருமான வரிச் சலுகை குறித்தும் முடிவு செய்யப்படவில்லை என்பது கூடுதல் தகவல்.