தந்தை வாங்கிய புது ஆட்டோ சிறுமிக்கு எமனாக மாறிய சோகம்..!!

 
Q Q

திருச்சியை சேர்ந்தவர் ராஜ்குமார். ஆட்டோ டிரைவர். இவருக்கு கிரேசிகா (வயது 9) என்ற மகளும், லிதன் ராம் (7) என்ற மகனும் உள்ளனர். 

நேற்று முன்தினம் ராஜ்குமார் சொந்தமாக ஒரு புதிய ஆட்டோ வாங்கினார். இந்த நிலையில், நேற்று குழந்தைகள் இருவரும் புதிய ஆட்டோவில் சுற்றிபார்க்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இதைத்தொடர்ந்து ராஜ்குமார் மகனையும், மகளையும் ஆட்டோவில் அழைத்துக் கொண்டு அப்பகுதியில் சுற்றி காண்பித்துள்ளார். அப்போது, தில்லாம்பட்டி அருகே உள்ள வெள்ளகுளம் என்ற பகுதியில் சுற்றியபோது, திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ கவிழ்ந்தது.

இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த கிரேசிகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ராஜ்குமாரும், லிதன் ராமும் லேசான காயத்துடன் தப்பினர். மகள் தனது கண்முன்னே இறந்ததை பார்த்து ராஜ்குமார் கதறி அழுதது பார்ப்போரையும் கண்கலங்க செய்தது. இதுகுறித்து தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கிரேசிகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.