வானில் இருந்து விழுந்த மர்ம பொருள்! திருப்பத்தூரில் பரபரப்பு

 
வானில் இருந்து விழுந்த மர்ம பொருள்! திருப்பத்தூரில் பரபரப்பு

திருப்பத்தூரில் வானில் இருந்து மர்ம பொருளால் நிலத்தில் 5 அடிக்கு பள்ளம் ஏற்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம் அச்சமங்கலத்தில் மர்ம பொருள் விழுந்து 5 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டது. அந்த பள்ளத்திலிருந்து அதிக வெப்ப அனல் வெளியானதாக பொதுமக்கள் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர், பள்ளத்தை சுற்றி வேலி போட்டு பாதுகாப்பாக வைக்க கிராம நிர்வாக அலுவலருக்கு உத்தரவிட்டார். பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்று ஆட்சியர் அறிவுறுத்தினார். மேலும் பள்ளம் ஏற்பட்ட இடத்தில் மண், சாம்பல் சேகரிக்கப்பட்டது.

ஆய்வுக்கு பின்னர் ஜோலார்பேட்டை அருகே அச்சமங்கலத்தில் 5 நாட்களுக்கு முன் வானில் இருந்து மர்ம பொருள் ஒன்று விழுந்து 5 அடி அளவிலான பள்ளம் ஏற்பட்ட நிலையில், வானில் இருந்து விழுந்தது எரிகல் தான் என்பது உறுதியாகி இருப்பதாக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.