கோயிலை இடித்துவிட்டுத்தானே மசூதி கட்டப்பட்டது - வானதி சீனிவாசன்

 
vanathi--srinivas-3

கோவை டவுன்ஹாலில் உள்ள கோனியம்மன் கோயிலில் தூய்மை பணிகளை பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் இன்று மேற்கொண்டார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவரிடம்   இராமர் கோவில் குறித்த அமைச்சர் உதயநிதியின் விமர்சனம் தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது.

vanathi srinivasan

 அப்போது பதிலளித்த அவர்,  அயோத்தியில் பாபர் மசூதி கட்டப்பட்டது கோயிலை இடித்து தான் என்ன உச்ச நீதிமன்றமே கூறிவிட்டது.   உண்மையான சமத்துவத்தை காட்ட ராமர் கோயில் நிகழ்வில் திமுகவினர் பங்கேற்க வேண்டும்.  சனாதன தர்மத்தின் ஒரு பங்கு தான் ஜல்லிக்கட்டு;  அதை கோவிலில் இருந்து பிரிக்க முடியாது. கோவிலில் இருந்து ஜல்லிக்கட்டு பிரிக்க பார்ப்பது முட்டாள்தனம்.  சாமி கும்பிடாமல் காளைகளை அவிழ்த்து விடுவதில்லை.  ஜல்லிக்கட்டு சனாதன தர்மத்தின் ஒரு பகுதி தான் என்றார். முன்னதாக ராமர் கோவில் திறப்பு, மத நம்பிக்கை ஆகியவற்றில் திமுகவுக்கு எதிர்ப்பு இல்லை.மசூதியை இடித்து கோயில் கட்டியதால் அதற்கு திமுக உடன்படவில்லை என்று அமைச்சர் உதயநிதி  கூறியது குறிப்பிடத்தக்கது.