12,646 VAO-க்களுக்கு ஜாக்பாட்! மாதம் ரூ.1000 அலுவலக பராமரிப்பு படி!!

 
assembly

ஒவ்வொரு VAO அலுவலகத்தின் பராமரிப்புச் செலவுகளுக்காக மாதம் ரூ.1,000 வீதம், ஆண்டுக்கு ரூ.12,000 வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார். அதன்படி, இத்திட்டத்திற்காக ரூ.8 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அரசாணையின்படி, கிராம நிருவாக அலுவலர் அலுவலக பராமரிப்பிற்காக ஒரு கிராம நிருவாக அலுவலருக்கு மாதம் ஒன்றிற்கு ரூ.1,000/- வீதம் ஆண்டொன்றிற்கு ரூ.12,000/- வழங்கப்படும். தமிழ்நாட்டில் மொத்தம் 12,646 கிராம நிருவாக அலுவலர்கள் (VAO) பணியில் உள்ளனர். இதில் 2026-2027 நிதியாண்டில் செப்டம்பர் 2026 முதல் மார்ச் 2027 வரை 7 மாதங்களுக்கு ரூ.8,85,22,000/- (ரூ.8 கோடியே 85 லட்சம்) நிதி ஒதுக்கீடு செய்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுவரை VAO அலுவலகம் என்பது பெரும்பாலும் VAO வீட்டின் ஒரு மூலையில், இல்லை என்றால் சத்திரம், கோவில் மண்டபத்தில் தான் இருந்தது. கரண்ட் பில், தண்ணி, துடைப்பம், சேர், டேபிள், ரெக்கார்டு பராமரிப்பு எல்லாம் VAO சொந்த காசில் தான் செய்தார். இப்போ மாதம் ரூ.1000 கிடைப்பதால் அலுவலகத்தை தூய்மையாக பராமரிக்க முடியும்.