#BREAKING பெரும் பரபரப்பு... பாமக எம்.எல்.ஏ காரை வழிமறித்து தாக்கிய கும்பல்!

 
ச் ச்

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே ராமதாஸ் ஆதரவு பாமக எம்.எல்.ஏ. அருள் பயணித்த காரை வழிமறித்து தாக்கிய அன்புமணி ஆதரவாளர்களால் பரபரப்பு ஏற்பட்டது. 

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே வடுகப்பட்டி பகுதியில் பாமக எம்.எல்.ஏ அருள் காரை வழிமறித்த அன்புமணி ஆதரவாளர்கள், கட்டைகள் மற்றும் கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். துக்க வீட்டுக்கு சென்ற அருளின் கார் தாக்கப்பட்டு, காரின் கண்ணாடி நொறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து இருதரப்பினர் இடையே கடும் மோதல் வெடித்தது. கட்டை, கற்கள் உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். கார் மீது தாக்குதல் நடத்தியவர்களை தடுக்க சென்ற எம்.எல்.ஏ ஆதரவாளர்கள் பலத்த காயமடைந்தனர். அன்புமணி ஆதரவாளர்கள்தான் கொலை முயற்சியில் ஈடுபட்டதாக அருள் எம்.எல்.ஏ பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.