விஜய் செய்யும் தவறு- தவெகவுக்கு தென் தமிழகத்தில் பெரும் பின்னடைவு!
தமிழக முதல்வர் வரலாற்றில் இதுவரை எந்த முதல்வரும் செய்யாத ஒரு தவறை முதல்வர் விஜய் செய்ய உள்ளார். அக்.30 பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை விழாவுக்கு போகாமல் தவிர்க்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
1979-ல் எம்.ஜி.ஆர் அரசு விழாவாக்கினார், 2007-ல் கருணாநிதி நேரில் வந்தார், ஜெயலலிதா 13 கிலோ தங்க கவசம் கொடுத்தார், எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் என அனைத்து முதல்வர்களும் பசும்பொன் மண்ணை மிதித்து மரியாதை செலுத்தியுள்ளனர். ஆனால் வரலாற்றிலேயே முதல்முறையாக பசும்பொன் போவதை தவிர்க்கும் ஒரே முதல்வர் விஜய் தான் என்ற விமர்சனம் தென் மாவட்டம் முழுவதும் பற்றி எரிகிறது. பசும்பொன் போவதை தவிர்த்துவிட்டு, சென்னையிலேயே ஒரு படத்துக்கு மாலை போட்டு மரியாதை செலுத்த திட்டமிடுவதாக கூறப்படுகிறது. தேவர் குருபூஜையை புறக்கணித்தவர் என்ற ஒரு வார்த்தை போதும், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் என 7 மாவட்டங்களில் உள்ள முக்குலத்தோர் வாக்குகள் மொத்தமாக தவெகவுக்கு எதிராக திரும்பும்.
விஜய் தவிர்க்கும் இந்த வாய்ப்பை மு.க.ஸ்டாலின் சரியாக பயன்படுத்தினால், தென் தமிழகம் முழுவதும் திமுகவுக்கு மீண்டும் ஜாக்பாட் தான். ஏற்கனவே 1967-ல் திமுக, பார்வர்டு பிளாக் உடன் கூட்டணி வைத்து தேவர் சமூக வாக்குகளை அள்ளிய வரலாறு உண்டு. இப்போது விஜய் தானே அந்த வாய்ப்பை திமுகவுக்கு தாரை வார்த்து கொடுக்கிறார். ஒரு தியாக வரலாற்றை அரசியல் பயத்துக்காக புறக்கணிப்பது ஒரு முதல்வருக்கு அழகல்ல. பசும்பொன் அழைக்கிறது, ஆனால் முதல்வர் தவிர்க்கிறார்.

