”வாழைப்பழம் வேண்டாம்.. நுங்கு தான் வேணும்”... வியாபாரியிடம் அடம் பிடித்த சுட்டி குரங்கு
கோடைவெயிலில் வாடிய குரங்கு வாழைப்பழம் வாங்க மறுத்து, நுங்கு கேட்டு முரட்டுப் பிடிவாதம் பிடித்தது.

கோடை காலத்தில் உடற்சூட்டை தனிப்பதில் முதன்மையானதும் இயற்கையாகக் கிடைக்கும் பனைநுங்குக்கு அதிக மவுசு உள்ளது. தமிழகம் எங்கும் சாலை ஓரங்களில் விற்கப்படும் ஒருநுங்கு ரூ.5, ரூ.10 முதல் ரூ.15வரை விலை உள்ளது. தற்பொழுது வெயிலின் தாக்கம் உச்சத்தில் உள்ளதால் பனைநுங்கு வியாபாரம் ரக்கை கட்டிப் பறக்கிறது.
”வாழைப்பழம் வேண்டாம்.. நுங்கு தான் வேணும்”.. வியாபாரியிடம் நுங்கு கேட்டு வாங்கி சாப்பிட்ட சுட்டி குரங்கு!#Mayiladuthurai #Monkey #Viralvideo #NewsTamil24x7 pic.twitter.com/L943Y1zMzH
— News Tamil 24x7 (@NewsTamilTV24x7) April 29, 2026
மயிலாடுதுறை அருகே தரங்கம்பாடி திருக்கடையூர் சாலை சிங்கனோடை பகுதி சாயோரம் நுங்கு விற்பனை செய்யப்பட்டுவருகிறது. அங்கே வந்த ஒரு குரங்கு நுங்கு வியாபாரியின் மேல் ஏறியும் அவரது ஆடையை பிடித்து இழுத்தும் ஏதோ கேட்பது போல் சத்தமிட்டு சமிக்கைகள் செய்தது. உடனே அந்த வியாபாரி தன்னிடம் இருந்த வாழைப்பழத்தை எடுத்துக் கொடுத்தார், குரங்கு என்றாலே வாழைப்பழம் என்பதால் கொடுத்தபோது அதனை வாங்க மறுத்துவிட்டது, மீண்டும் அது அடம்பிடிக்கவே நுங்குதான் கேட்கிறது என்பதை அறிந்த வியாபாரி உடனே நுங்கினை எடுத்துக் கொடுத்தார் அதை வாங்கி மகிழ்ச்சியிடன் சாப்பிட்டுக் கொண்டே மரத்தில் ஏறியது. நுங்கை சாப்பிட்டு முடித்த குரங்கு மீண்டும் வியாபாரியிடம் வந்து நுங்கு கேட்டு அடம் பிடித்தது. சற்றும் சலிக்காமல் வியாபாரி மகிழ்ச்சியோடு பனங்காயை சீவி மரத்தில் இருந்த குரங்கிற்குக் கொடுத்தார். பனங்காயில் உள்ள நுங்கை விரல்களால் தோண்டியும் வாயால் கடித்தும் ருசி பார்த்தது, இதனைக்கண்டவர்கள் குரங்கின் செயலை கண்டு வியப்பில் ஆழ்ந்தனர். நுங்கின் பயன்களை எடுத்துக்கூறிய பிறகே மனிதர்கள் அதனைத்தேடிச் செல்லும் நிலையில் இயற்கையிலேயே அதன் பெருமைகளை அறிந்த குரங்கு தன்னால் பனங்காயை பறித்து நுங்கை சுவைக்க முடியாவிட்டாலும் இந்த நூதன முறையைக் கையாண்டது வியப்பாக இருந்தது.

