நாளை திமுக எம்.பி.,க்கள் கூட்டம் நடைபெறும் - துரைமுருகன் அறிவிப்பு

 
duraimurugan duraimurugan

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக எம்பிக்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

duraimurugan

இதுதொடர்பாக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், தேர்ந்தெடுக்கப்பட்ட கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம், 08-06-2024 சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு, சென்னை, அண்ணா அறிவாலயம், 'கலைஞர் அரங்கத்தில்' நடைபெறும்.

tn


அதுபோது, தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.