ஃபேன்சி ஸ்டோருக்குள் புகுந்து திருமணமான பெண்ணுக்குக் கத்திக்குத்து….நட்பை தொடர மறுத்ததால் ஆத்திரம்..!
ஈரோடு சத்தியமங்கலம் தாளவாடி பகுதியை சேர்ந்தவர் அஞ்சு. இவருக்கும் சாம்ராஜ்நகரைச் சேர்ந்த ஒருவருக்கும் திருமணமாகி மகன் மற்றும் மகள் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவரை விட்டு பிரிந்து வந்த அஞ்சு, தாளவாடியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்திருக்கிறார். தொடர்ந்து, குடும்பத் தேவைக்காக அதேபகுதியில் உள்ள கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.
இதற்கிடையே, பைனானஸ் கம்பெனி உரிமையாளர் நகேந்திரன் (28) என்பவருடன் அஞ்சு நட்பு ரீதியாக பழகி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த சூழலில், கணவருடன் சமாதானம் ஏற்பட்டு, அவருடன் அஞ்சு மீண்டும் சேர்ந்து வாழ தொடங்கி இருக்கிறார்.
கணவருடன் மீண்டும் சேர்ந்திருந்தாலும் சாம்ராஜ்நகரில் உள்ள கடையில் பணிபுரிவதை அவர் தொடர்ந்து மேற்கொண்டு வந்திருக்கிறார். இதற்காக அவர் தினமும் பேருந்தில் வந்து சென்றிருக்கிறார். அத்துடன், கணவருடன் மீண்டும் இணைந்துவிட்ட காரணத்தால் பைனான்ஸ் கம்பெனி உரிமையாளர் நகேந்திரன் உடனான நட்பை அஞ்சு முற்றிலும் துண்டித்துவிட்டதாக தெரிகிறது.
இதனை ஏற்றக் கொள்ள முடியாத நாகேந்திரன், தொடர்ச்சியாக அஞ்சுவை சந்தித்து, அவருடன் பேசும்படி வற்புறுத்தி வந்திருக்கிறார். இருப்பினும், அஞ்சு அவரிடம் பேச மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த சூழலில், அஞ்சு பணிபுரியும் கடைக்கு நேரில் வந்த நாகேந்திரன், மீண்டும் அவரிடம் பேச வற்புறுத்தி வாக்குவாதம் செய்திருக்கிறார். ஆனால், தனக்கு திருமணமாகி குழந்தை இருக்கிறது, தன்னை விட்டும்படி அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, பலமுறை கெஞ்சியும் அஞ்சு தன்னுடன் பேச மறுத்துவிட்டதால், ஆத்திரமடைந்த நாகேந்திரன், அவர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாக தாக்கியுள்ளார். இதனைக் கண்டு அதிர்ந்துபோன கடையில் வேலை பார்த்த ஊழியர் ஒருவர், உடனடியாக நகேந்திரனை தடுத்தி நிறுத்தி, அஞ்சுவை பெரும் அசம்பாவிதத்தில் இருந்து காப்பாற்றினர்.அத்துடன், சம்பவம் குறித்து போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், தாக்குதலில் கடுமையான காயமடைந்த அஞ்சுவை மீட்டு தாளவாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இச்சம்பவம் தொடர்பாக தாளவாடி போலீசார், கைது செய்ய வருவதை அறிந்த நகேந்திரன், உடனடியாக விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து அவரையும் மீட்ட அப்பகுதி மக்கள், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆகையால், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த தாளவாடி போலீசார் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த கொடூர சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

