ஆபாச வீடியோவை இணையத்தில் பதிவேற்றம் செய்து விடுவதாக பணம் கேட்டு மிரட்டிய நபர் கைது

 
வீடியோ

கன்னியாகுமரியில் ஆபாச வீடியோவை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து விடுவதாக பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டிய நபரை நாகர்கோவில் சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

ஆபாச வீடியோவை காட்டி மிரட்டல்

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த சுமார் 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவருக்கு ஒரு செல்போனிலிருந்து  இருந்து வாட்சப்  வழியாக நபர் ஒருவர் தொடர்ந்து ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பிவந்துள்ளார். மேலும் இணையதளத்தில் அப்பெண்ணின் ஆபாச வீடியோவை பரப்பிவிடுவதாக பணம் கேட்டு மிரட்டவும் செய்துள்ளார். 

இதையடுத்து அப்பெண் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் நேரடியாக புகார் மனு ஒன்றை அளித்தார். இப்புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க சைபர் கிரைம் போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரன் பிரசாத் உத்தரவிட்டார். சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர்  வசந்தி தலைமையிலான சைபர் கிரைம் போலீசார் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி, மிரட்டிய நபரை கண்டறிந்தனர். பின்பு குற்றவாளியை பொறிவைத்து பிடித்தனர். அந்த நபர் கேரளா மாநிலம் மூணார் பகுதியை சேர்ந்த இருளப்பன் என்பவர் மகன் ராஜ்குமார் (வயது 39) என்பதும், தற்போது மதுரையில் ஓட்டுநராக பணிபுரிந்து வருவதும் விசாரணையில் தெரியவந்தது. மேலும் அவர்கள் இருவரும் நண்பர்களாக பழகி உள்ளனர். சைபர் கிரைம் காவல்நிலைய போலீசார் அந்நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.