தலைக்கேறிய போதை... 120 அடி உயர பனை மர உச்சியில் தூங்கிய ஆசாமி

 
Sleep

பொள்ளாச்சி கோட்டூர் சாலை ஆவில் சின்னாம்பாளையம் பகுதியில் தலை உச்சிக்கு ஏறிய மது போதையால், பனை மர உச்சிக்கு ஏறி உறங்கிய போதை ஆசாமியால் பரபரப்பு ஏற்பட்டது.

சின்னாம்பாளையம் பகுதியில் சாலையோரம் இருந்த 120 அடி உயரமுள்ள பனை மரத்தில் ஒருவர் உறங்கிக் கொண்டிருந்ததை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதனை அறிந்து அக்கம் பக்கம் உள்ள நூற்றுக்கணக்கான கிராம மக்கள் அங்கு திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசாருக்கு தகவல் தந்த நிலையிலே அங்கு வந்த போலீசார் கூச்சலிட்டு சத்தம் போட்ட நிலையிலே அந்த நபர் காதில் விழவில்லை. பின்னர் தீயணைப்புத் துறைவிற்கு தகவல் கொடுத்ததை அடுத்து அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், கயிறு கட்டி  அந்த நபரை மீட்க முயன்றும் பயனளிக்கவில்லை. 

பின்னர் இரும்புக்குண்டு பொருத்தப்பட்ட ராட்சச கிரேன் கொண்டுவரபட்டு  மேலே சென்ற தீயணைப்பு வீரர்கள் மது போதையில் பனை மரத்தின் கிளைகளில் உறங்கிக் கொண்டிருந்த அந்த நபரை லாவகமாக தூக்கி இரும்பு குண்டில் வைத்து கீழே கொண்டு வந்தனர். மூன்று மணி நேரத்துக்கு மேல் போராடி தீயணைப்பு வீரர்கள் அந்த ஆசாமியை கீழே இறக்கியவுடன் அங்கிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் ஆரவாரத்துடன் கைகளை தட்டி நன்றி தெரிவித்தனர் . அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டபோது பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை செம்மனாம்தியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி லட்சுமணன் என்பதும் மது அருந்திவிட்டு மரம் ஏறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். 

அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு மரத்தின் மீது ஏறி உறங்கியதாக தெரிவித்தார். பின்னர் போலீசார் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மது போதையில் மர உச்சிக்கு சென்று உறங்கிய நபரின் செயலால் பரபரப்பு ஏற்பட்டன.