முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு மிகப்பெரிய பின்னடைவு- கைவிரித்த உச்சநீதிமன்றம்
உயர்நீதிமன்ற உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரிய தனது மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து, கே.என். நேரு தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
நகராட்சித் துறையில் அரசு பணியில் சேர்வதற்கு லஞ்சம் வாங்கியதாக எழுந்த விவகாரத்தில் தனக்கு எதிரான வழக்கிற்கு எதிராக கே. என். நேரு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம். உங்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நீங்கள் ஒன்றும் சாதாரண நபர் கிடையாது. சம்பந்தப்பட்ட அந்த துறையின் அமைச்சர் நீங்கள். அப்படி இருக்கும் பொழுது அந்த துறையில் நடந்ததாக சொல்லப்படும் மிகப்பெரிய முறைகேடு வழக்கில் நீங்கள் விசாரணைக்கு உட்பட்டு தான் ஆக வேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். நேரு மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்த நிலையில் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ததால் நேருவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

